மதுரையில் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

மதுரையிலுள்ள உணவகங்களில் சமைக்கப்படும் பொருள்களின் தரம் குறித்து உணவுப்பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

Update: 2022-05-05 10:15 GMT

மதுரையிலுள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி  சோதனை நடத்தி  பழைய சிக்கன் மாமிசத்தை  பறிமுதல் செய்தனர்.

உணவகத்தில் சிக்கன் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட குழந்தை மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அசைவ உணவகங்களில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.  மதுரை மாவட்டத்தில், உள்ள 52கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம் தலைமையிலான குழுவினர், நேரில் ஆய்வு செய்து,10கிலோ பழைய சிக்கன் மாமிசத்தை  பறிமுதல் செய்தனர். அத்துடன், 5 கடைகளுக்கு நோட்டீஸ் அளித்தனர்.  சிக்கன் ஷவர்மா கடைகளில், பழைய சிக்கன் கறிகளை பயன்படுத்தக்கூடாது, சமைத்த உணவுப்பொருட்களை ப்ரீட்ஜரில் வைக்க கூடாது, உணவுப்பொருட்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News