மதுரை அருகே பறக்கும் படையினர் சோதனையில் ரூ.78 ஆயிரம் பறிமுதல்

மதுரை அருகே, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-02-08 09:30 GMT

பரவை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில், காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்டவ் ரூ.78690 பறிமுதல் செய்யப்பட்டது. 

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சார பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரை பரவை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கொண்டு செல்லப்படுகிறதா, என்பதனை கண்காணிக்க தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். 

அப்போது, பரவை - மதுரை சாலையில் வேகமாக சென்ற காரை மடக்கி வாகனச் சோதனை செய்தபோது, மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.78690 பணத்தை காரில் எடுத்து வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த சமயநல்லூர் போலீசார் மற்றும் பறக்கும் படை தாசில்தார் சரவண பெருமாள்,  பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News