மதுரை அருகே மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்: போலீஸார் ஏற்பாடு
இதனால் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காயம் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது.;
மதுரையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் கொம்புகளிள் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர்.
இதனால் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காயம் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை போக்குவரத்து காவல்துறையினர் ஒட்டி வருகின்றனர். அதன்படி, மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிக்குமார் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் மற்றும் நெடுஞ்சாலைகளை ஒட்டி உள்ள கிராமங்களில் மாடுகளை வைத்திருக்கும் பொது மக்களின் வீடுகளுக்கு சென்று மாடுகளின் கொம்புகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதில், உதவி ஆய்வாளர் கணேசன், காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.