திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிதிஅமைச்சர் பிரச்சாரம்
மதுரை நகராட்சி தி.மு.க. வேட்பாளர் இந்திராணி பொன்.வசந்தை ஆதரித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் செய்தார்.;
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதுரை மாநகராட்சி 57வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் இந்திராணி பொன் வசந்த்தை ஆதரித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மோதிலால் மெயின் ரோடு பகுதியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். மேலும், ஆரப்பாளையம்,கிராஸ் ரோடு, மேலப்பொன்னகரம் போன்ற பகுதிகளில் அமைச்சர் பிரசாரம் மேற் கொண்டார்.