மதுரை அரசு ஐடிஐ -இல் பெண்கள் சேர கால அவகாசம் நீட்டிப்பு
14 வயது முதல் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெறும் பெண்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது;
மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கு கால நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-ம் ஆண்டிற்கான ( மகளீர் ) உடனடி சேர்க்கைக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, டிச. 31..ஆம் தேதி வரை கால நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் போது, பயிற்சி பெறும் பெண்களுக்கு, பயிற்சிக் கட்டணம் கிடையாது. மேலும், சீருடைகள், மூடு காலணிகள், வரைபடக் கருவிகள், பேருந்து சலுகை, மடிக் கணிணி, மிதி வண்டி மற்றும் மாதாந்திர உதவித் தொகை ரூ. 750 வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பபதிவுக் கட்டணம் ரூ. 50. மேலும் விவரங்களுக்கு, 8248907516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.