மேலூர் பாசனக் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட ஓட்டுனர்
மேலூரில், குடிபோதையில் பாசன கால்வாயில் விழுந்து ஓட்டுனர் உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட்டது.
மதுரை மாவட்டம், மேலூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ,தனியார் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை முதல், விஜயகுமார் வீடு திரும்பாததால், பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிவந்தனர்.
இதனிடையே, மேலூர் பகுதியில் உள்ள பெரியார் பாசன கால்வாயில் , விஜயகுமார் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், விஜயகுமார் குடிபோதையில் பாசனக் கால்வாய் தண்ணீர் விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.