உயிரிழந்த சிறுமியின் தாய்க்கு அரசுப் பணி வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவு

மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் தாய்க்கு சத்துணவுத்திட்டத்தில் சமையலர் பணி வழங்கி மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்

Update: 2022-03-09 23:30 GMT

மதுரை அருகே சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாய்க்கு அரசு பணி வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவு

மதுரை மேலூர் அருகே தும்பைபட்டியில் 17 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சிறுமியின் தாய் சபரிக்கு ,அரசு வேலை வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலவளவு அரசு துவக்கபள்ளியில், சமையலராக நியமிக்கப்பட்டதற்கான  பணி ஆணையை மேலூர் வட்டாட்சியர் இளமுருகன் நேரில் சென்று வழங்கினார்.

சிறுமி  உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய  8 பேர் மீது மேலூர் போலீஸார் வழக்குப் பதிந்து  கைது செய்துள்ளனர்.  இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி பாஜகவினர் மதுரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News