அலங்காநல்லூர் அருகே அதிமுக உறுப்பினர்களுக்கு அட்டை வழங்குதல்
அலங்காநல்லூர் அருகே அதிமுக உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர் பேரூர் அதிமுக சார்பாக புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தெப்பக்குளம் சமுதாயக் கூடத்தில், பேரூர் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய கழகச் செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் அழகுராஜ், முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், கலந்து கொண்டு, புதிய உறுப்பினர் அடையாள அட்டையினை நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, அவர் பேசியது: அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு ஜெயலலிதா ராணுவ கட்டுப்பாட்டுடன் இயங்கிய இயக்கத்தை தற்போது, எடப்பாடி பழனிச்சாமி , கட்டிக் காத்து வருகிறார்.
பல இடங்களுக்கு கூட்டங்களுக்கு செல்லும் டிடிவி தினகரன் அதிமுக விரைவில் அழிந்துவிடும் என்று கூறி வருகிறார். அதிமுகவை எவர் ஒருவர் அழிந்துவிடும் அழித்து விடுவேன் என்று கூறுகிறாரோ அவர் தான் இதுவரை அழிந்ததாக வரலாறு உண்டு. அதிமுக என்னும் இயக்கத்தை அளிப்பதற்கு எந்தக் கொம்பாதி கொம்பனாலும் முடியாது. புரட்சித்தலைவி கூறியது போல் எனக்கு பின்னும் இந்த இயக்கம் நூறாண்டுகள் கடந்து வீரநடை போடும் மக்களுக்கு சேவை செய்ய அதிமுக என்னும் இயக்கம் தொடங்கப்பட்டது.
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சக்கரை ஆலை கடந்த அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கி ஆலை இயக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் முடக்கப்பட்டு உள்ளது இப்போது கூட முன்னதாக விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து சக்கர ஆலை முன்பு போராட்டம் நடத்தித்தான் வருகின்றோம். தொடர்ந்து, ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
2026 வருவதற்குள் ஓராண்டு கட்சிப் பணிகளில் தீவிரமாக நமது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் . 2026ல் அதிமுக ஆட்சி அமைந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அமருவார் நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை தரக்கூடிய ஒரே தலைவர் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், வக்கீல் திருப்பதி, வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், மாணிக்கம், மகேந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் அரியூர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி காளிதாஸ், கொரியர் கணேசன், பாலமேடு நகரச் செயலாளர் குமார், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், நகரபொருளாளர் சுந்தர்ராகவன், நகர இனைச் செயலாளர் புலியம்மாள், துணைச் செயலாளர் லதா, நகர பிரதிநிதிகள் முரளி, பாண்டிசெல்வி, வார்டு செயலாளர்கள் கேபில்பாஸ்கரன், வலசை கார்த்திக், குருணிபாஸ்கரன், பாண்டி, ராஜா, கணேசன், முருகசுந்தரம், வலநாடு, ராதாகிருஷ்ணன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயச்சந்திரன்மணியன், செந்தில்குமார், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மனோகரன், முடுவார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம், மற்றும் முத்துகிருஷ்ணன், ஒன்றியக் கவுன்சிலர் ரேவதி, மகளிரணி நிர்வாகிகள் லெட்சுமி, மருதாயி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.