மதுரை அருகே புத்தாண்டையொட்டி அழகர் மலையில் குவிந்த பக்தர்கள்
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி அழகர் கோவில் மற்றும் ஆறுபடைவீடு முருகன் கோவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மதுரை அருகே உள்ளது அழகர் கோவில் ஆகும். இது, தென்திருப்பதி என்றும் போற்றிப் புகழ் பெற்றபாடல் பெற்ற தலமாகும். இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி, அழகர் மலை மேல் உள்ள புனித தீர்த்தமான நூபுர கங்கையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நீராடி, தாங்கள் கொண்டு வந்த கேனில் புனித நீரை நிரப்பிக் கொண்டு, ராக்காயி அம்மனை வழிபட்டு,தொடர்ந்து வரும் வழியில் உள்ள ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையும், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து தொடர்ந்தனர். மலை அடிவாரத்திலுள்ள கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமானை வழிபட்டு ,ஸ்ரீதேவி பூதேவி வழிபட்டு தொடர்ந்து கல்யாண சுந்தரவல்லி தாயார், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஆண்டாள் வழிபட்டும், காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பண்ண சாமியும் வழிபட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் அலுவலக பணியாளர்கள் மேற்கொண்டிருந்தனர்.