மதுரை அருகே கொரோனா விழிப்புணர்வு: போலீஸ் எஸ்.பி. தொடங்கி வைத்தார்

Update: 2022-01-11 05:00 GMT

மதுரையில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம்  அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல்துறையினர்


மதுரை அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீஸார்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை காவல்துறையினர் மேற்கொள்வதாக  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தெரிவித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் பல்வேறு கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பொது மக்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.அதன்பேரில், மாவட்டம் முழுவதும் காவல் அதிகாரிகள் அனைவரும் பொதுமக்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.

ஒத்தக்கடை பகுதியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், அப்பகுதியில் வந்த பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணித்த பொதுமக்களுக்கும் முகக் கவசங்களை வழங்கி பொதுமக்கள் பொது இடங்களில் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை பற்றி ,பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அத்துடன் நில்லாமல், மதுரை மாவட்டத்தில் மேலும், பொதுமக்களுக்கு வேண்டிய விழிப்புணர்வு வழங்கி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மதுரை மக்களுக்கு அறிவுரை வழங்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.மேலும், பொதுமக்களும் காவல்துறைக்கு தங்களுடைய ஒத்துழைப்பை வழங்கி கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News