மதுரையில் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்: அமைச்சர் மூர்த்தி தொடக்கம்
இந்த காப்பீட்டுக்கான அடையாள அட்டை மூலம் ரூபாய் 5 இலட்சம் வரையிலான மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்கிறது.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, யா.ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , சிறப்பு முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டு காப்பீட்டுக்கான அடையாள அட்டையை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் 6 மாத காலம் நிறைவடைந்துள்ளது. இந்த இரண்டரை ஆண்டு காலங்களில், ஏதாவதொரு வகையில் மக்களுக்கு பயன்தரக்கூடிய திட்டங்களை செயல்படுத்தும் பணியினை முழுமையாக செய்து வருகிறார்.
குறிப்பாக, பெண்கள் தம்முடைய குடும்பத்தாரையோ, பிறரையோ எதிர்பார்த்து வாழாமல் சுயமாக சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் , கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம், 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். மகளிர் சுயஉதவித் திட்டத்தில் புதிதாக 200 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சேர்ந்துள்ளார்கள். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 100 கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதற்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுக்கான அடையாள அட்டை மூலம் ரூபாய் 5 இலட்சம் வரையிலான மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர், இத்திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு 100 சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திட்டத்தை புதிது புதிதாக செயல்படுத்தி வருகிறார். ஒத்தக்கடையில் பாதாள சாக்கடை வசதியினை ஏற்படுத்து தருவாக தேர்தலின்போது வாக்குறுதி அளித்தேன். அதனை நிறைவேற்றும் விதமாக 82 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்பணியினை, நிறைவேற்றிய பின்னர் சாக்கடை தேங்கி உள்ள இராஜகம்பீரம் கண்மாயினை தூர்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வழிவகை செய்யப்படும்.
மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் யா.ஒத்தக்கடையில் உள்ள ஆரம்ப சுதார நிலையத்தில் அதிகமான மருத்துவர்கள், செவிலியர்களை பணியில் சேர்ப்பதற்கு அந்த துறையிடம் ஆலோசித்து நடவடிக்ககை மேற்கொள்ளப் படும். மேலும், குடிநீர் பற்றாக்குறை கிழக்குத் சட்டமன்ற தொகுதியில் உள்ள கிராமங்களில் இருக்கக் கூடாது என்பதற்காக 100 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர், கிராமங்கள்தோறும் சென்று மக்களுக்கு என்னென்ன அடிப்படை வசதிகளை தேவை என்பதை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் , எல்லா மக்களும் எல்லாம் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடும், திராவிட மாடல் ஆட்சியில் வேறுபாடு இன்றி, பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடும் செயல்பட்டு வருகிறார். மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடையில் ரூபாய் 82 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும்,குடிநீர் பற்றாக்குறை உள்ள கிராமங்களைக் கண்டறிந்து 100 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்த முகாமின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மாவட்ட ஊராட்சித்தலைவர் சூரியகலா கலாநிதி , ஊராட்சி ஒன்றிக்குழுத் தலைவர் மணிமேகலை , ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.