கேபிள் ஆபரேட்டர்கள் அனலாக் தொகையை விரைந்து செலுத்த ஆட்சியர் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 178 எல்.சி.ஓ-க்கள் அனலாக் தொகையினை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளார்கள்

Update: 2022-01-06 05:00 GMT

பைல் படம்

 கேபிள்டிவி ஆபரேட்டர்கள் அனலாக் தொகையினை விரைந்து செலுத்த  வேண்டுமென மதுரை  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ சேகர் வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் துவங்கப்பட்டு செப்டம்பர் 2021 முதல் இந்நிறுவனத்தின் கீழ் உள்ளுர் கேபிள் ஆபரேட்டராக பதிவு எண் பெற்ற ஆப்பரேட்டர்கள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சந்தாதாரர்களுக்கு அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்து வந்தது. இந்நிலையில், பிரதி மாதந்தோறும் ஒவ்வொரு ஆபரேட்டருக்கும் அவரவர் கேட்புத் தொகை எழுதப்பட்டு குறிப்பிட்ட தேதிக்குள் ஆன்லைன் மூலம் சந்தா தொகை செலுத்தும் வகையில், மென்பொருளில் வழிவகை செய்யப்பட்டது. அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் சந்தா தொகை செலுத்த தவறும் ஆபரேட்டர்களுக்கு காலதாமதத்திற்கேற்ப ஆன்லைனில் நாளுக்கு நாள் அபராதக் கட்டணம்  குறிப்பிட்டு  வசூல் செய்யப்பட்டு வந்தது.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 178 எல்.சி.ஓ-க்கள் அனலாக் தொகையினை செலுத்தாமல்  நிலுவையில் வைத்துள்ளார்கள். நிலுவைத் தொகையினை செலுத்த சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இரு முறை குறிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  நாளது தேதி வரை பாக்கி தொகையினை செலுத்தப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட எல்.சி.ஓ-க்கள் 25.01.2022-ஆம் தேதிக்குள் உடன் அரசு கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என்றும் பாக்கித் தொகையினை செலுத்தத் தவறினால் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News