மதுரை அருகே கூட்டுறவு பட்டாசு சில்லரை விற்பனை நிலையம்: அமைச்சர் மூர்த்தி திறப்பு
மதுரை அருகே கூட்டுறவு பட்டாசு சில்லரை விற்பனை நிலையத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.;
தீபாவளி பண்டிகையை, முன்னிட்டு மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கீழ் கண்ணனேந்தல் பட்டாசு சில்லரை விற்பனை நிலையத்தை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்து தெரிவிக்கையில்:-
மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிட். 22.11.1939-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு 17.12.1939-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
ரூ.45.42 இலட்சம் பங்கு மூலதனத்துடன் பங்குத்தொகை மதுரை மாவட்டம் முழுவதும் விவகார எல்லையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நுகர்வோர்களுக்காக தரமான பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.
பண்டகசாலை மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.110.00 இலட்சம் வரை கட்டுப்பாட்டு பொருட்களையும் சுமார் ரூ.540.00 இலட்சம் வரை கட்டுப்பாடற்ற பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.
மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கீழ் 4 சுயசேவைப் பிரிவுகள்6 மருந்தகங்கள் 1 எரிவாயு கிட்டங்கி பழனி மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது.
மேலும, அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பண்டகசாலையால் 134 முழுநேர நியாயவிலைக்கடைகளும் 1 பகுதிநேர நியாயவிலைக் கடையும் ஆக மொத்தம் 135 நியாயவிலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கடைகள் மூலம் 137686 குடும்ப அட்டைதாரர்களுக்க குடிமைப்பொருட்கள் மற்றும் சிறப்பு குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்து வருகிறது.
2021-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்
துறையின் மூலமாக பட்டாசு விற்பனை செய்யப்பட உள்ளது. பண்டகசாலையின் கீழ் கண்ணனேந்தல் பட்டாசு சில்லரை விற்பனை நிலையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு இடங்களில் பண்டகசாலையின் கீழ் பட்டாசு சில்லரை விற்பனை நிலையம் துவக்கி வைக்கப்பட உள்ளன என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் மரு.த.நா.பிரிதர்ஷினி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் (மதுரை மண்டலம்) .சி.குருமூர்த்தி, மற்றும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் மரு..ஜூவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.