சித்திரைத்திருவிழா: கள்ளழகர் திருக்கோயில் முகூர்த்தக் கால் நடும் விழா
சித்திரைத்திருவிழாவையொட்டி அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் விழா;
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் 1431ம் பசலி சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, கொட்டகை முகூர்த்த விழா எதிர்வரும் 01.04.2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சந்நிதியில், சைத்ர உற்சவம் முகூர்த்தம் மற்றும் ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து , பகல் 2.30 மணிக்கு மேல் 3.00 மணிக்குள் மதுரை வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம் நடைபெற்றது அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் துணை ஆணையர்-செயல் அலுவலர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.