பைபாஸ் அறுவை சிகிச்சை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை
தமிழகத்தில் முதன்முறையாக செய்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை:;
சிக்கலான டபுள் பேரல் STA MCA பைபாஸ் அறுவை சிகிச்சையை தமிழகத்தில் முதன்முறையாக செய்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை:
திருநெல்வேலியைச் சேர்ந்த 50 வயதான பெண்தமிழகத்தில் முதன்முறையாக செய்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை: ஒருவர் தலைவலி, பேச்சு இழப்பு, வலது கண் பார்வை இழப்பு , இடது கை கால்களில் பலவீனம் போன்ற பல்வேறு பிரச்னைகளால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையைச் சார்ந்த மருத்துவர் வெங்கடேசன் தலைமையிலான மருத்துவ குழு ஆய்வு செய்த பொழுது அவருக்கு மூளையில் கடும் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து, குடும்ப உறுப்பினர்களுக்கு இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் அதிநவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் வெங்கடேசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த பெண்மணிக்கு டபுள் பேரில் STA -MCA பைபாஸ் அறுவை சிகிச்சை 10 மணி நேரம் செய்து அந்த பெண் தற்பொழுது நலமுடன் உள்ளார்.இந்த அறுவை சிகிச்சை இதுவே முதன்முறையாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.