மதுரை அருகே ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

இதன் மூலம் மதுரை மாநகராட்சியில் உள்ள 74 பள்ளி களில் பயிலும் 71197 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகிறார்கள்;

Update: 2023-08-25 10:30 GMT

ஊராட்சி ஒன்றியப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தை தொடக்கி வைத்த வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி

மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சின்னபட்டி கிராமத்தில் உள்ளஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உணவு வழங்கி உடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சரால் காலை உணவு திட்டம் விரிவாக்கம் இன்று (25.08.2023) நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மதுரை மாவட்டம், மேற்கு ஊராட்சி ஒன்றியம் சின்னபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுதுறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவு வழங்கி உடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுதுறை அமைச்சர் பி.மூர்த்தி  தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் , பள்ளிக்குப் பசியோடு படிக்க வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் 15.09.2022-அன்று மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில்1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இதன் மூலம் மதுரை மாநகராட்சியில் உள்ள 74 பள்ளிகளில் பயிலும் 71197 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் அனைத்து பள்ளி மாணவ, மாணவியர் களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், தற்போது முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தினை நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் தொடங்கி வைத்துள்ளார்கள்.

மதுரை மாவட்டத்தில், 420 கிராம ஊராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் மொத்தம் 949 அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 52298 மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் சமையல் பணியாளர்கள் தயார் செய்து உரிய நேரத்தில் வழங்க வேண்டும். இதனை, சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுதுறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, கூடுதல் ஆட்சியர்கள் செ.சரவணன், மோனிகா ராணா, மேற்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வீரராகவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News