மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றவரை தடுத்த பாஜக நிர்வாகி

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரைபாஜக மாவட்டத் தலைவர் காப்பாற்றினார்;

Update: 2022-04-25 12:15 GMT

துரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரை காப்பாற்றிய பாஜக மாவட்டத் தலைவர்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரை பாஜக மாவட்டத் தலைவர் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை தெப்பக்குளம் பாயை சேர்ந்தவர் திருஞானம் . இவர் திமுகவைச் சேர்ந்தவர். இவர், தனது மகன் அரசு பணிக்காக மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறையில், உள்ள ஒருவரிடம் பணம் ரூபாய் 3 லட்சம் கொடுத்ததாக தெரியவருகிறது. ஆனால், அவர் பணி வாங்கி கொடுக்காமல், திருஞானத்தை, ஏமாற்றுவதாக தெரியவரவே, இதனால் அவர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கெரசின் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த, முன்னாள் எம்.ல்ஏ வும், மதுரை மாவட்ட பாஜக தலைவருமான டாக்டர் சரவணன் மற்றும் பாஜக தொண்டர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது பாட்டில் உள்ள தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்தனர்.

Tags:    

Similar News