மதுரை அருகே விடுதலை வாக்கத்தானையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை அருகே விடுதலை வாக்கத்தானையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
விடுதலை வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி மதுரை திருமோகூர் சாலையில், உள்ள தனியார் பேக்கரியில், "விடுதலை மாரத்தான்" போட்டிகளுக்கான விளம்பர போஸ்டா் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளார் இளங்குமரன் வரவேற்புரை வழங்கினார். வீரவிளையாட்டு அமைப்பாளா் நீலமேகம் "விடுதலை வாக்கத்தான்" விளம்பர போஸ்டரை வெளியீடு செய்தார். இதனைத் தொடர்ந்து, மக்கள் கூட்டு இயக்கம் அமைப்பாளா் காளிதாஸ் அதனைப்பெற்று கொண்டாா்.
இதில் தினகரன், பிலால், காளி, பாரதி, பாண்டியன், கதிரேசன், ஆறுமுகம், தென்னவன், காா்த்திகேயன், பிரபு, பாண்டி, ரபீக் ராஜா, விஜய அரசு, விவேகானந்தன், சரவணக்குமாா், சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில், கோபால் நன்றி கூறினார்.
மதுரை அருகே, உள்ள யானைமலை ஒத்தக்கடை பகுதிகளில் 78 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, இந்த "விடுதலை வாக்கத்தான்" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. யானைமலை ஒத்தக்கடை நரசிங்கம் கோதண்டராமர் கோயில் முன்பாக (ஞாயிற்றுக்கிழமை) ஆக.11 ம் தேதியன்று காலை 5.30 மணிக்குத் தொடங்கி பெண்களுக்கான சாரி வாக்கத்தான், சிறுவர்களுக்கான மெல்லோட்டம் வாக்கத்தான் நரசிங்கம் சாலை முழுவதும் சுற்றிவந்து முடிவடைகிறது.
இதில் ஒத்தக்கடை மற்றும் சுற்றுப்புற பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் இணைந்து கொள்ளலாம். பெண்களுக்கு சாரி, சிறுவர்களுக்கு டீ -சர்ட் வழங்குகின்றோம். இதற்கான பங்கேற்புக் கட்டணம் 199 ரூ முன்னதாகவே க்யூ ஆர் கோடு மூலமாக பணத்தை செலுத்திவிட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர் இளங்குமரன் கூறியுள்ளாா். மேலும் தகவலுக்கு 97895 27616 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.