அழகர் கோவில் ஆடித் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் இன்று இரவு அன்ன வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்

Update: 2022-08-04 07:45 GMT

அழகர்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்திருவிழா

அழகர்கோவிலில் ஆடிப்பெரும் திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் இன்று இரவு அன்ன வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை சிம்ம வாகனத்தில் புறப்பாடாகிறார். தொடர்ந்து, சனிக்கிழமை அனுமார் வாகனத்திலும் ஞாயிற்றுக்கிழமை கருட வாகனத்திலும் திங்கள் கிழமை சேஷா வாகனத்திலும் செவ்வாய்க்கிழமை யானை வாகனத்திலும் புதன்கிழமை புஷ்ப சப்பரத்திலும் வியாழக்கிழமை தங்க பல்லக்கில் தங்கப்பிள்ளைகள் எழுந்தருளி குதிரை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் அன்று இரவு புஷ்ப பல்லாக்கில் சுந்தர்ராஜ் பெருமாள் புறப்பட காட்சி கொடுக்கிறார். தொடர்ந்து, சனிக்கிழமை தீர்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை உற்சவ சாதியுடன் ஆடிப்பெரும் திருவிழா நிறைவு பெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலரும் துணை ஆணையாளர் மு.ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News