மதுரை அருகே வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி
மதுரை அருகே வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.;
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது; அப்போது, இருசக்கர வாகனம் ஒன்றின் மீது அந்த பஸ் மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அர்ச்சுனன் (20), ஸ்ரீகாந்த் (21) என்ற இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து, போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.