மதுரை அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் கிராமம்
மதுரை சிவகங்கை சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு களால் கருப்பாயூரணி கிராம மக்கள் சிரமப்படும் நிலை நீடிக்கிறது;
மதுரை சிவகங்கை சாலையில் கருப்பாயூரணி அமைந்துள்ளது .இந்த கிராமத்தில் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்தும், சாலையின் ஓரங்களில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால், மதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
மதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில், ஒத்தப்பட்டி, ஓடைப்பட்டி, களிமங்கலம், பூவந்தி, வரிச்சூர், சக்கிமங்கலம், கல்மேடு நகர், திருமாஞ்சோலை, பகுதிகளுக்கு அதிக அளவு பஸ் வசதி இல்லாததால், இப்பகுதியில் ஷேர் ஆட்டோக்களே மினி பஸ்க்களாக செயல்படுகிறது.
.அவ்வாறு செயல்படும் ஆட்டோ களில் பலர்,சாலை விதிகளை கடைபிடிப்பதில்லை. இவர்கள், ஆட்கள் ஏற்றதற்காக சாலை நடுவே ஆட்டோக்களை நிறுத்தி, குறிப்பாக பஸ் நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மதுரை சிவகங்கை சாலையில், கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப்பள்ளி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் பலர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுரை நகர போக்குவரத்து துணை ஆணையர் கவனத்துக்கு கொண்டு சென்றும் கூட ,காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ந்து நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது, இப்பகுதி மக்களின் புகாராகும். மேலும், ஆட்டோக்கள் பல பெரும் உரிய தகுதிச் சான்று என்றும் அதிக ஆட்களை ஏற்றி இயக்கப்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது .
ஆகவே ,மதுரை மண்டல போக்குவரத்து அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்தும், அனுமதி இல்லாத ஆட்டோக்களை கட்டுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரி உள்ளனர்.
கருப்பாயூரணி போலீசார்,காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்தை சீர் செய்ய ஒரே நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், சாலை விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது எவ்வித பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர் .