மதுரையில் இளைஞரை வெட்டி படுகொலை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல்

எஸ் .எஸ். காலனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்;

Update: 2022-08-28 15:45 GMT

கொலையாளிகளைத்  தடுக்க முயற்சி செய்தபோது தாக்கப்பட்ட  பிரகாஷின் சித்தி வாசுகி

மதுரையில் இளைஞரை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை எஸ். எஸ். காலனி காவல் எல்லைக்குட்பட்ட எல்லிஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த  பிரகாஷ் ( 25.). ஆட்டோ மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் வீட்டு வாசலில் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது,  ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிக்க முயற்சித்தனர். அதை தடுக்க முயற்சி செய்த பிரகாஷின் சித்தி வாசுகியையும்  வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது.

மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்த எஸ் .எஸ். காலனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காயம் பட்ட வாசுகியை 108 அவசர கால ஊர்தி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் இரட்டை கொலை நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News