மதுரை அருகே மின்சாதன பொருட்கள் கடையில் தீ விபத்து

மதுரை அருகே கடையில் நேரிட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன;

Update: 2022-04-20 14:45 GMT

மதுரை அருகே மின் சாதனப் பொருட்கள் கடையில் நேரிட்ட  தீ விபத்து

மதுரை அருகே மின் சாதனப் பொருட்கள் கடையில் நேரிட்ட  தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

மதுரை அருகே, கடச்சனேந்தல் நேரத்தில் பகுதியில், ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பெறுமான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. கடைசியில் உள்ள மின்சாதன பொருட்கள் கடையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ  வேகமாக பரவியதால் கடையின் உள்ளே யாரும் செல்ல முடியவில்லை. இதனால், கடையினுள் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் பெறுமான மின்சாதன பொருட்கள் தீயில் சேதமடைந்தன. தகவலறிந்த  தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால்  தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து  புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News