மதுரை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்;

Update: 2022-01-22 13:00 GMT

கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய  நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில், சமூகவிரோதச் செயல்கள், கொலை, மணல் கடத்தல், போதைப்பொருட்கள் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் படி காவலில் அடைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.

அந்த வகையில், மதுரை மாவட்டம் சோழவந்தான், காவல் நிலையத்தில் தாக்கலான கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த நான்கு பேரின் நடவடிக்கையை கட்டுப்படுத்த, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சமயநல்லூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பால சுந்தரம் மற்றும் சோழவந்தான் காவல் நிலைய ஆய்வாளர் சிவபாலன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட  மேல நாச்சிகுளம் பூவேந்திரன்( 23,) , கரட்டுப்பட்டி ஜெயசூர்யா( 22.), சுபாஷ்( 21.),  சிவா(21.)  ஆகிய நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், பரிந்துரையின் பேரில், மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்படி 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க ஆணையிட்டார். அதன்படி, மதுரை மத்திய சிறைச்சாலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த மேற்படி 4 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணை வழங்கி மேற்படி நான்கு எதிரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மதுரை மாவட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News