மதுரை அருகே கொரோனா தொற்றில்லாத கிராமமாக மாறிய கிடாரிப்பட்டி

மதுரை அருகே கிடாரிபட்டியில் கொரோனா இல்லாத கிராமமாக திகழ்கிறது.;

Update: 2021-07-06 11:43 GMT

மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகே கிடாரிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஹேமலதா மதிவாணன் தூய்மை பணியாளர்களுக்கு கப சுர குடிநீர் வழங்குகிறார்.

கொரோனா தொற்றில்லாத கிராமமாக மாறிய கிடாரிப்பட்டி  ஊராட்சி மன்ற தலைவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன 

கொரானா பெருந்தொற்றை ஒழிக்க அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகே கிடாரிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஹேமலதா மதிவாணன் மேற்கொண்ட பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக  கொரோனா தொற்றில்லாத கிராமமாக மாறியது.

 அரசு மற்றும் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களின்படி தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர் மூலம்  ஊராட்சி முழுவதும் தூய்மைப்பணிகள் இடைவிடாது செய்யப்பட்டன. மேலும்,  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள்  போன்ற நோய்த்தடுப்புக் காரணிகளை சமூக அக்கறையுடன் கிராம மக்களிடம் கொண்டு சேர்த்ததால்  கொரானா தொற்று  இல்லாத கிராமமாக மாறியுள்ளது.

மேலும்,கிராம மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி,ரேசன் கடை உள்ளிட்ட  அடிப்படை வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் நிறைவேற்றி உள்ளது.   அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொரோனா தொற்றில்லாத கிராமமாக மாற்றிக்காட்டியுள்ள கிடாரிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஹேமலதா மதிவாணனுக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

Similar News