மதுரை: மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்க கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்க கட்டுப்பாட்டு அறை தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தகவல்.;

Update: 2021-05-07 05:17 GMT

மதுரையில் கொரோனா பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் ஆக்சிஜன் தேவை குறித்தும், சிகிச்சை குறித்தும் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த த.அன்பழகன்:

மதுரை அரசு கொரோனா மருத்துவமனைகளில் 90சதவித ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்டது 1100படுக்கைகளில் ஆயிரம் படுக்கைகள் நிரம்பிவிட்டதாகவும், மதுரை கொரோனா அரசு மருத்துவமனைகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது, மதுரையில் 100சதவிகிதம் ஆக்சிஜன் தேவையிருந்த நிலையில் தற்போதைய 300சதவிகிதம் ஆக்சிஜன் தேவைகள் அதிகரித்துள்ளது, புதிதாக அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளில் 30சதவிகிதம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது, அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன்கள் உடனுக்குடன் நிரப்பவும், ஆக்சிஜனை வீணாக்காமல் பயன்படுத்துவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டது, தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன்களை ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களுடன் பெற்றுகொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, தனியார் மருத்துவமனைகளில் உயிர்காக்கும் அவசர தேவைக்கு ஆக்சிஜன் தேவையை சரிசெய்ய துணை இயக்குனர்கள், மருத்துவ அதிகாரிகள் அடங்கிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக பெற்றுகொள்ளலாம் தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தேவை குறித்து சமூகவலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும்,

மதுரை மாவட்டத்தில் கோவிட் கட்டுப்பாட்டு பகுதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா அரசு மருத்துவமனைகள் என 3பகுதிகளில் கொரோனா சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருகின்றன, தனியார் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாட்டு பகுதியில் 1500க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.

Tags:    

Similar News