மதுரைக்கு வந்த தமிழக ஆளுநரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்
மதுரைக்கு வந்த ஆளுநரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வரவேற்றனர்;
மதுரைக்கு வந்த ஆளுநரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்
மதுரைக்கு வந்த ஆளுநரை மாவட்ட ஆட்சியர் வரவேற்றார்
மதுரையில் நடைபெற உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில், கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என். ரவி மதுரை வந்தடைந்தார். மதுரைக்கு வந்த ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் வரவேற்றனர். தற்போது , மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியுள்ளார். மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், மதியம் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.