மதுரை மாநகராட்சி சார்பில் வெறி நாய்களுக்கு தடுப்பூசி

மதுரை மாநகராட்சி வெறிநாய்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

Update: 2023-09-20 11:37 GMT

நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்ட மேயர் 

மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் ரவுண்டானா அருகில் வெறிநாய்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை, மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் பிரவீன்குமார், ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் தெருக்களில் திரியும் நாய்களால் பொதுமக்களை அச்சுறுத்தல், போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்துகள், மக்களின் உயிரை பறிக்கும் அபாயகரமான நிலை, நாயால் மனிதர்கள் கடிபடுவது ”நாய்கடி ரேபிஸ்” தடுப்பு நடவடிக்கை பணி வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம் 18.09.2023 முதல் 28.09.2023 வரை காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

மேற்படி சிறப்பு முகாம் நாட்களில் வார்டு பகுதிக்கு வந்து மாநகராட்சி பணியாளர்கள் நேரடியாக தெருநாய் பிடிக்கும் வாகனத்தினை கொண்டு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முகாம் நாட்களில் அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களின் உரிமைதாரர்கள், நாயால் மனிதர்கள் கடிபடுவது, தடுப்பு சிறப்பு பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு மதுரை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக நடைபெற்ற வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாமினை, மேயர், ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். இந்த சிறப்பு முகாமில் மண்டலம் 3 வார்டு எண்.56, 57, 58 ஆகிய மூன்று வார்டுகளில் தெருக்களில் திரியும் 111 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து வார்டு பகுதிகளிலும் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

இம்முகாமில், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் கவிதா, கால்நடை மருத்துவர் ஜெயகிருஷ்ணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News