சினிமா திரையரங்கில் இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள் நீதி மையத்தினர்
நடிகர் கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்கூட்டியே இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள் நீதி மய்ய கட்சியினர்.;
மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அண்ணாநகரில் உள்ள திரையரங்கில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் மக்கள் நீதி மைய நிர்வாகிகள், அண்ணாநகர் முத்துராமன், அழகர், குணா அலி, நாகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கமலஹாசனின் பிறந்தநாள் நவம்பர். 7.ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், மதுரையில் முன் கூட்டியே, அக்கட்சியினர் சினிமா திரையரங்கில் இனிப்பு வழங்கியது அனைவரையூம் வியப்பில் ஆழ்த்தியது.