மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் திறப்பு விழா

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

Update: 2024-02-28 08:19 GMT

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கூடுதல் கட்டணங்களை தெரிந்து வைத்தார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்

மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை சார்­பில், மது­ரை–­அ­ரசு இரா­ஜாஜி மருத்­து­வ­ம­னை­யில் 313 கோடியே 25 இலட்­சம் ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள 6 தளங்­கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்­ட­டம் மற்­றும் நவீன மருத்­துவ உப­க­ர­ணங்­கள், 29 கோடி ரூபாய் செல­வில், அரசு இரா­ஜாஜி மருத்­து­வ­மனை, தோப்­பூர் அரசு காச­நோய் மருத்­து­வ­மனை, மதுரை, அரசு மருத்­து­வக் கல்­லூரி, உசி­லம்­பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்­து­வ­மனை, சம­ய­நல்­லூர், சுகா­தா­ரம் மற்­றும் குடும்­ப­நல பயிற்சி மையம் மற்­றும் துணை செவி­லி­யர் பயிற்­சிப் பள்ளி ஆகிய இடங்­க­ளில் கட்­டப்­பட்­டுள்ள மருத்­து­வத் துறை கட்­ட­டங்­கள் ஆகிய திட்டப்பணிகளை, முதல்வர் . ஸ்லின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் .

இந்த நிகழ்வில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இருந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காணொளி காட்சி மூலம் நன்றி தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ தளபதி , புதூர் பூமிநாதன், வெங்கடேசன் மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News