காரியாபட்டி அருகே லாரியில் தீ விபத்து: டிரைவர் உயிர் தப்பினார்
காரியாபட்டி அருகே லாரியில் ஏற்பட்டதீ விபத்தில், டிரைவர் உயிர் தப்பினார்.;
தூத்துக்குடியில் இருந்து பழைய பேப்பர் ஏற்றி, மதுரைக்கு சென்ற மினி லாரி காரியாபட்டி அருகே தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. விபத்தில் டிரைவர் தப்பினார். தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.