சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு மத்திய அரசு விருது

.10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது;

Update: 2021-12-18 09:45 GMT

எவ்வித சர்ச்சையிலும் சிக்காத மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு விருது:மத்திய அரசு அறிவிப்பு 

எந்தவித சர்ச்சையிலும் சிக்காத மதுரை மாவட்ட  போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல், சிறப்பாக பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது .அந்த அடிப்படையில், மதுரையை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை நகர் இன்ஸ்பெக்டர்கள் திருப்பாலை எஸ்தர், சைபர் கிரைம் செந்தில் இளந்திரையன், பாதுகாப்பு உளவுப்பிரிவு எஸ்.ஐ. சங்கரபாண்டியன், கியூ பிராஞ்ச் எஸ்.ஐ .வன வீரபாண்டியன், ஆறாவது சிறப்பு பட்டாலியன் இன்ஸ்பெக்டர் மான்சிங், எஸ்.ஐ-கள் வீரணன் , சிவராமன், பாஸ்கரன்,  காவலர் ராமதுரை ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News