மக்களை தேடி மருத்துவ திட்டத்துக்கு உபகரணங்கள்: மேயர் வழங்கல்

மக்களை தேடி மருத்துவ திட்டப் பணியாளர் களுக்கு தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் உபகரணங்கள் வழங்கப்பட்டன;

Update: 2023-05-13 08:00 GMT

மக்களை தேடி மருத்துவ திட்டப் பணியாளர்களுக்கு தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் மருத்துவ உபகரணங்களை, மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.

மக்களை தேடி மருத்துவ திட்டப் பணியாளர்களுக்கு தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் மருத்துவ உபகரணங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் மக்களை தேடி மருத்துவ திட்டப் பணியளர்களுக்கு மருத்துவ உபகரணங்களை, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் நேற்று  வழங்கினர்.

தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டமான மக்களை தேடி மருத்துவ திட்டம் மதுரை மாநகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.மதுரை மாநகராட்சியின் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 155 பகுதிகளில் இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தமானி உபகரணம் மூலம் பெண் சுகாதார தன்னார்வலர்கள் கொண்டு , களப்பணிகள் மூலமாக பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினை நகர்ப்புறங்களில் மேலும், அதிகரிக்கும் விதமாக ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.5.60 லட்சம் மதிப்பீட்டில் 186 இரத்த அழுத்தமானிகள், 186 இரத்த சர்க்கரை அளவீடு கருவிகள், 13470 குளுக்கோஸ் ஸ்டிரிப்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை மக்களை தேடி மருத்துவ பணியாளர்களுக்கு மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் ,உதவி நகர்நல அலுவலர் மரு.ஸ்ரீகோதை, ஜோஸ் ஆலுக்காஸ் மேலாளர்கள் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News