மதுரை மாவட்ட குற்றச் செய்திகள்:

மதுரையில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் பற்றிய செய்தி தொகுப்பு;

Update: 2023-04-08 16:07 GMT

பைல் படம்.

முகவரி கேட்பது போல் நடித்து வாலிபரிடம் செயின் செல்போன் பறிப்பு: பைக் ஆசாமிகள் கைவரிசை.

அய்யர் பங்களாவில் முகவரி கேட்பது போல் நடித்து வாலிபரிடம் செல்போன் செயின் பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

அய்யர்பங்களா உச்சபரம்புமேட்டை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் தென்னரசு 20. இவர் குலமங்கலம் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்று ஆசாமிகள் முகவரி கேட்பது போல் அவரிடம் கேட்டுள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த ஒருபவுன் செயினையும்,செல்போன் ஒன்றையும் பறித்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தென்னரசு கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செல் போன், செயின் பறித்த பைக்ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


பொன்மேனியில்  பள்ளி நிர்வாகி வீட்டை உடைத்து பணம் பொருள்கள் கொள்ளை.

பொன்மேனியில் பள்ளி நிர்வாகியின் வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பொன்மேனி ஜே.டி. நகரை சேர்ந்தவர் டெய்சி 40 .இவர் அங்குள்ள பள்ளி ஒன்றின் தலைமை நிர்வாகியாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் முன் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் அர் பீரோவில் வைத்திருந்த ரூ 67 ஆயிரம், கைக்கடிகாரம் இரண்டு, செல்போன் 2 ,மற்றும் டி வி ஆர் பாக்ஸ் முதலியவைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து டெய்சக எஸ். எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றது.


திருநகரில் வீட்டை உடைத்து தங்கம் வெள்ளி நகைகள் திருட்டு

திருநகரில் வீட்டின் கதவை உடைத்து தங்கம் வெள்ளி நகைகளை திருடி சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநகர் தனக்கன்குளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜெயபால் 44. சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்தார்.அப்போது அவரது வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் வீட்டில் வைத்திருந்த மூன்று பவுன் தங்க தோடு மோதிரம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து ஜெயபால் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.


கிருஷ்ணாபுரம் காலனியில்  சின்டெக்ஸ் தொட்டிக்குள் விழுந்து முதியவர் பலி

கிருஷ்ணாபுரம் காலனியில் சின்டெக்ஸ் தொட்டிக்குள் தவறி விழுந்து முதியவர் பலியானார்.

கிருஷ்ணாபுரம் காலனி ஏழாவது தெரு வ உ சி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி 83. சம்பவத்தன்று இவரை காணவில்லை. வீட்டில் உள்ளவர்கள் அவரை அங்கும் இங்கும் தேடியும் அவரைக்காணவில்லை.   அவர்கள் சந்தேகம் அடைந்து சின்டக்ஸ் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தபோது உள்ளே விழுந்து சுப்பிரமணி இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அவர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெத்தானியாபுரதில் கணவர் இறந்த சோகத்தில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

பெத்தானியாபுரம் மூக்கையா தேவர் தெருவை சேர்ந்தவர் தேவி 43. இவரது கணவர் கடந்த வருடம் இறந்து விட்டார். இதனால் கணவர் இருந்த சோகத்தில் தேவி இருந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து மகன் ரஞ்சித் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேவியின் தற்கொலைக்கான காரண குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News