மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை..!

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் சிபிஎம் வெல்டப்பாளர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 06:29 GMT

கோப்பு படம், தேர்தல் முடிவுகள் 

6ஆம் சுற்று முடிவு

சிபிஎம் சு. வெங்கடேசன் - 1,36,487

அதிமுக டாக்டர் சரவணன் - 71,886

பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் - 65,387

நாம் தமிழர் சத்யா தேவி - 30,601

சிபிஎம் சு.வெங்கடேசன் 6ஆம்சுற்று முடிவில் 64,601 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

மதுரை : 2ஆம் சுற்று முடிவு

சிபி எம் சு. வெங்கடேசன் - 47,673

அதிமுக டாக்டர் சரவணன் - 29,534

பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் - 17,909

நாம் தமிழர் சத்யா தேவி :- 12,065

சிபிஎம் சு.வெங்கடேசன் 2ஆம்சுற்று முடிவில் 18,249 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

5ஆம் சுற்று முடிவு

சிபிஎம் சு. வெங்கடேசன் - 1,15,439

அதிமுக டாக்டர் சரவணன் - 63,196

பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் - 52,229

நாம் தமிழர் சத்யா தேவி -26,208

சிபிஎம் சு.வெங்கடேசன் 5ஆம்சுற்று முடிவில் 52,243 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

காங்கிரசில் புதிய உற்சாகம் 

காங்கிரஸ் வி ஐ பி வேட்பாளர் ராகுல் காந்தியோ தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். ஒரு சுற்றில் கூட அவர் பின்னடைவு ஏற்படாமல் முன்னிலை வகித்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி அவரை எதிர்த்து போட்டியிட்ட பிஜேபி வேட்பாளரை விட சுமார் 50,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

அதே நேரத்தில் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆணி ராஜாவை விட ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கூடுதல் பெற்றுள்ளார். கடந்த தேர்தலின் போது ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ஸ்ருதிராணியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார். தற்போது இரண்டு தொகுதிகளிலும் நல்ல முன்னிலை பெற்று வருவது காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Tags:    

Similar News