மதுரையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை
மதுரை மாவட்டத்தில், தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.;
மதுரையில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் 18 பொது இடங்களுக்கு வர அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி, கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி, ஹோட்டல், பார், வணிக வளாகங்கள், ரேஷன்கடை, தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது. திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், மார்க்கெட்டுக்கும் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டத்திற்கு பின்னர், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் இந்த உத்தரவினை பிறபித்துள்ளார். ஏற்கனவே, தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.