பிறப்பு- இறப்பு சான்றிதழ்: வீடுகளுக்கே சென்று வழங்கிய பேரூராட்சித் தலைவர்

காரியாபட்டியில் பிறப்பு - இறப்பு சான்றிதழை வீடு தேடி வழங்கும் திட்டத்தை தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்;

Update: 2022-03-11 13:00 GMT

காரியாபட்டி பேரூராட்சியில் பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் பயனாளிகள் வீடு தேடி வழங்கும் திட்டம் தொடக்கம்

தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்

காரியாபட்டி பேரூராட்சியில் பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் பயனாளிகள் வீடு தேடி வழங்கும் திட்டம்:தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில், பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் வீடுகளுக்கு சென்று வழங்கும் திட்டத்தை தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு தேவையான பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை. பொதுமக்களின் வீட்டுக்கு சென்று நேரில் வழங்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி , விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் ஆலோசனைப்படி, நேற்று முதல்

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் நேரடியாக வழங்கும் பணி துவங்கப்பட்டது . காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில் வீடு வீடாக சென்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களுக்கு வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார.

நிகழ்ச்சியில் , செயல் அலுவலர் ரவிக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் ரூபி சந்தோசம், பேரூராட்சி கவுன்சிலர்கள்சரஸ்வதி, பாண்டியராஜன், சங்கரேஸ்வரன், நாகஜோதி, ராமகிருஷ்ணன், முனீஸ்வரி, இனியவன்,முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News