மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராக பாலகிருஷ்ணன் தேர்வு

மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலமாநாட்டில் அக்கட்சியின் மாநிலச்செயலராக பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்;

Update: 2022-04-01 15:30 GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலராக  மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.  பாலகிருஷ்ணன்

மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில்  பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது மாநில மாநாடு மார்ச் 30-31, ஏப்.1 -தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்  80 பேர் கொண்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கட்சி விதிப்படி 72 வயது நிறைவடைந்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்திரராசன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 80 பேரிலிருந்த 15 பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. செயற்குழு உறுப்பினர்களாக கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத், ப.செல்வசிங், எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், எஸ்.நூர்முகமது, பி.சண்முகம், என்.குணசேகரன், கே.கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், சு.வெங்கடேசன் எம்.பி, கே.பாலபாரதி, ஜி.சுகுமாறன், கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News