அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: அமைச்சர் தங்கம்தென்னரசு தகவல்

சுகாதார வளாகம், சிமெண்டு சாலை உள்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது;

Update: 2022-03-03 06:00 GMT

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் முடுக்கங்குளம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது  என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம், முடுக்கன்குளம் ஊராட்சியில் பல்வேறு திட்டம் பணிகள் துவக்கவிழா நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி தலைமையில் நடைபெற்ற விழாவில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார்.

பின்னர்  அமைச்சர்   பேசியதாவது: திருச்சுழி தொகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் மக்களுக்கு தேவையான வசதிகளை நிறைவேற்றி வருகிறோம். காரியாபட்டி முடுக்கங்குளம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சத்துறை சார்பாக பேவர்பிளாக் சாலை அமைத்தல் , குடிநீர் பைப்லைன், சமுதாயக் கூடம், சுகாதார வளாகம்,  சிமெண்டு சாலை போன்ற திட்டங்கள் அமைக்க ரூ.90 -லட்சம் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. முடுக்கன்குளம் ஊராட்சியை உள்ளடக்கிய பல வேறு குக்கிராமங்கள் உள்ளன.

இங்குள்ள மக்களின் அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் மூலமாக நிறைவேற்றி வருகிறோம். இந்தாண்டு திருச்சுழி தொகுதியில் 23 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முடுக்கங்குளம் பகுதி விவசாயிகள் பாதுகாப்புக்காக இங்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முடுக்கங்குளத்தில் துணை மின்நிலையம், அமைக்கப்படும் மேலும், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மீண்டும் நடைமுறைப் படுத்தவுள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்வதற்காக முடுக்கங்குளம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் தங்கம்தென்னரசு.

இதில், காரியாபட்டி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துமாரி, துணைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய ஆணையாளர்கள் ராஜசேகர் , சிவக்குமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கண்ணன், செல்லம் வாலை முத்துசாமி சிவானந்தவர்மன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News