அருப்புக்கோட்டை ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் அறிவியல் கண்காட்சி
அருப்புக்கோட்டை ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி மாணவர்களின் வேளாண் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.;
வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பாக நடைபெற்ற கண்காட்சி.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பாக விவசாயிகளுக்கான சிறப்புக் கூட்டம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
அருப்புக்கோட்டை வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் லீமா ரோஸ், நரிக்குடி வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் செல்வராஜ், துணை வேளாண்மை இயக்குநர் வளர்மதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, உலக வானிலை தினம் பற்றி உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளின் கீழ் கலசலிங்கம், நம்மாழ்வார் மற்றும் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்களின் கண்காட்சி நடைபெற்றது.
இதில், மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் எஸ். வாசந்தி, ப. சிவ ஷாலினி, செ. சௌந்தர்யா, என். சிரியா, பா. சுகிபிரபா ஆகியோர் காற்று என்னும் தலைப்பில் காற்று சம்பந்தப்பட்ட சாதனங்கள்,காற்றாலை,புயல் மற்றும் சூறாவளி உருவாக்கம், பியூஃபோர்ட் அளவுகோல் ஆகியவற்றிற்கான மாதிரிகள் வைத்து விளக்கினர்.
பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இக்கண்காட்சியை கண்டுகளித்தனர்.