தளி பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது

தளி பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-12 14:15 GMT

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராஜ் என்பவர் 11.03.2022 ஆம் தேதி வீட்டிற்குத் தேவையான மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு தளி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது திம்மராஜினுடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.250 பிக்பாக்கெட் அடித்து அவனது பாக்கெட்டில் வைத்ததை பார்த்த திம்மராஜ் நண்பர்களின் உதவியுடன் ஒருவரை பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News