கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் கொலை மிரட்டல் விடுத்தவர் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-15 15:58 GMT

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமோதனள்ளியில் தமிழ்செல்வி என்பவர் அவருடைய நிலத்திற்கு கடந்த 10ம் தேதி கல்கம்பம் நட்டு முள்கம்பி வேலி அமைத்துக்கொண்டிருந்தார்.

அப்போது பக்கத்து நிலத்துக்காரர் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்செல்வியை தகாத வார்த்தையால் பேசி,கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் இரும்புக் கம்பியை காட்டி என் நிலத்தில் கால் வைத்தால் உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அன்று இரவு சுமார் 11.00 மணிக்குமேல் கல்கம்பம் மற்றும் முள் கம்பி வேலியை  பக்கத்து நிலத்துக்காரர் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில், தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பக்கத்து நிலத்துக்காரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News