சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி அருகே சாலைகள் குண்டும் குழியாகவும், மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாகவும் உள்ளதால் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.;

Update: 2023-11-04 14:12 GMT

கணவாய்ப்பட்டி வெங்கட்ட ரமண சாமி கோவில் முதல் மேலேரிக்கொட்டாய் வரை உள்ள சுமார், 3 கிலோ மீட்டர் தூர சாலைகள் குண்டும் குழியாகவும், மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாகவும் உள்ளது. இதனால் இப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் விழுந்து விபத்துகளுண் அதிகரித்துள்ளது. இதை சீர் செய்யக் கோரி பொதுமக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மேலேரிக்கொட்டாய் -கிருஷ்ணகிரி சாலையில் அப்பகுதியை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் மற்றும் கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் மற்றும் வருவாய்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி மனு அளித்து வருடக்கணக்கில் ஆகியும் நடவடிக்கை இல்லை. சாக்கடை கால்வாய் இல்லை, குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என்றனர். அந்த நேரம் சாலை மறியல் காரணமாக அரசு பேருந்துகள், தனியார் பள்ளி வாகனங்கள் செல்ல முடியவில்லை.இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளா னார்கள்.

தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ஆஜி உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தொடர்ந்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News