கிருஷ்ணகிரி: பள்ளி மைதானத்தில் இயங்கும் காய்கறி மார்கெட்டை இடமாற்றம் செய்ய கோரிக்கை

கிருஷ்ணகிரியில், அரசு பள்ளி மைதானத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-07-07 02:15 GMT

கிருஷ்ணகிரியில், அரசு பள்ளி மைதானத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்கெட்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிரிக்கத்த நேரத்தில்,  ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உழவர் சந்தை, சாலையோரங்களில் உள்ள காய்கறி கடைகள், பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.

அதன்படி, கிருஷ்ணகிரியில் உழவர் சந்தை, கோ-ஆப்ரேட்டிவ் காலனி, தினசரி காய்கறி மார்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அனைத்து காய்கறி கடைகளும் இடமாற்றம் செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உழவர் சந்தை மற்றும் சாலையோரங்களில் காய்கறி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பள்ளி விளையாட்டு மைதானத்தில் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. 
அண்மையில் கிருஷ்ணகிரி பகுதியில் மழை பெய்தது.

இதனால், காய்கறி வாங்க இருசக்கர வாகனங்களில் வருபவர்களும், காய்கறி லோடு இறக்க வரும் டெம்போக்கள் வந்து செல்வதால் மைதானம் முழுவதும் சேரும், சகதியுமாக மாறியுள்ளது. பள்ளி வளாகத்தில் மார்க்கெட் செயல்படுவதால், வழக்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் சூழ்நிலை உள்ளதால், உடனடியாக இந்த காய்கறி கடைகளை அகற்றி, மைதானத்தை சீர்செய்து, மாணவர்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News