கிருஷ்ணகிரி: 6 தொகுதிகளில் 120 வேட்புமனு தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிட மொத்தம் 120 பேர் வேட்புமனு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.;

Update: 2021-03-22 03:32 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி உட்பட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் கடைசி நாளான நேற்று சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 49 பேர் மனுத்தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிட திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக வேட்பாளர்கள் உட்பட 120 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News