கிருஷ்ணகிரியில் 72 வது குடியரசு தின விழா

Update: 2021-01-26 05:15 GMT

நாட்டின் 72வது குடியரசு தினவிழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் .

நாட்டின் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று , ரூ 35 லட்சத்து 74 ஆயிரத்து 474 ரூபாய் மதிப்பில் 25 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .மேலும் மாவட்டத்திலுள்ள அரசு துறைகளில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பதக்கங்களை வழங்கியும் பாராட்டினார் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி., பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News