உடல் நலக்குறைவால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்: கை துண்டான பரிதாபம்
ஒசூர் அருகே உடல் நலக்குறைவால் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் ரயில் முன் பாய்ந்ததால் கை துண்டானது.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த சின்னபேட்டகாணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வேலன்(20) என்னும் இளைஞர். இவர் உடல் நிலை சரியில்லாததால் டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றபோது தீடிரென அந்த இளைஞர் அதே பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில் இளைஞரில் இடது கை துண்டானது. உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் கை துண்டாகி தனியாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இளைஞர் கை துண்டான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ஓசூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.