குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை
கெலமங்கலம் அருகே குடும்ப தகராறில் பெண் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.
கெலமங்கலம் அருகே குடும்ப தகராறில் பெண் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேவகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம்மா. இவருக்கு குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி காலை தேவகானப்பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.