இ&வே பில் இல்லாத வாகனம் பறிமுதல்

ஓசூர் அருகே இ&வே பில் இல்லாத வாகனத்தை பறிமுதல் செய்த மத்திய கலால் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-03-27 12:15 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவின் தடுப்பு விழிப்புணர்வுக்காக ஓசூர் 1ம் பிரிவு மத்திய கலால் சரக்கு மற்றும் சேவை வரித்துறை துணை ஆணையர் ரம்யா தலைமையில், ஆய்வாளர்கள் மோகித், சரவணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கடந்த சில நாட்களாக ஓசூர் பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் கிடங்குகளில் அதிரடியாக சோதனை செய்தனர். இதே குழுவினர், ஓசூர் டிவிஎஸ் நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. ஆனால் அதற்கான இ&வே பில் உள்ளிட்ட எவ்வித ஆவணமும் இல்லாததால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News