ஓசூரில் தக்காளி கிலோ ரூ.90 க்கு விற்பனை: இல்லத்தரசிகள் கவலை
ஓசூரில் தக்காளி கிலோ ரூ.90 க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் வேதனையுடன் வாங்கி சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தக்காளி செடிகள், காய்கள் சேதமடைந்துள்ளன. இதனால், தக்காளியின் வரத்து குறைந்து விலை உயா்ந்துள்ளது.
கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ. 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அண்மையில் பெய்த கன மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது. இதனால் தற்போது ஓசூர் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி இல்லத்தரசிகள் வேதனையுடன் வாங்கி செல்கின்றனர்.